தமிழ் சினிமாவின் புதிய கதை களத்தின் பின்னணியில் கதைகளை சொல்லி பார்வையாளர்களை தன் வசப்படுத்துவதில் புதுமுக கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் பாரிய பங்கு உண்டு.
அந்த வகையில் மற்றொரு புதுமுக நடிகர் பிருத்விராஜ் ராமலிங்கம் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'குட் டே ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் டே' திரைப்படத்தில் பிருத்விராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், 'மைனா 'நந்தினி, போஸ் வெங்கட், பகவதி பெருமாள், 'ஆடுகளம்' முருகதாஸ், வேல். ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மதன் குண தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை நியூமாங்க் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
குறிப்பாக காவல்துறையில் தற்கொலைக்கான காரணத்தை கடிதம் வடிவாக விவரித்திருக்கும் கதாபாத்திரத்தின் குரல் - அதற்கேற்ற காட்சிகள் - ரசிகர்களை படத்தை காண வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM