இந்தியா முழுவதும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'குபேரா ' திரைப்படத்தின் முன்னோட்டம் படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே காண வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டியதா? இல்லையா? என்னும் விவாதம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இந்தியா முழுவதும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் படக் குழுவினருக்கு ஏராளமான சங்கடங்களும் , சாதகங்களும் உள்ளன.
ஒரு படத்தைப் பற்றி படக்குழுவினர் அதிகமாக அறிவித்தாலும் அல்லது படத்தைப் பற்றி குறைவாக சொன்னாலும் ரசிகர்கள் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த பிறகு தான் அதனை உறுதிப்படுத்துகிறார்கள். இந்த தருணத்தில் தனுஷ் , ராஷ்மிகா மந்தானா , நாகார்ஜுனா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'குபேரா' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் தற்போது உலகம் முழுவதும் பணத்தை நோக்கி விரைவாக செல்லும் மக்களுக்கும் பணம் மட்டுமே இந்த உலகத்தில் வாழ்வதற்கு போதுமான காரணி அல்ல வேறு சில விடயங்களும் உண்டு என்பதை உணர்த்தும் கதாபாத்திரங்களும் நேர்த்தியாகவும் , விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் படத்தை பற்றிய நேர் நிலையான அதிர்வலை ஏற்பட்டிருப்பதாகவே திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
ஒரு பிச்சைக்காரனால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியை விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டிருப்பதால்.. 'குபேரா ' திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே காண வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இப்படத்தின் தமிழ் பதிப்பிலான முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இதனிடையே இந்த திரைப்படம் எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM