இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தக நாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மிகப் பிரபல்யம் வாய்ந்த கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மேம்படுத்தும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், சமீபத்தில் மேலும் மேம்பட்ட அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சமீபத்திய இந்த புனரமைப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, பெயர்ப் பலகைகளின் (signage) புதுப்பிப்பு முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இதில் தெளிவான நேர அட்டவணைகள், புகையிரத மேடை இலக்கங்கள், திசை காட்டும் பலகைகள் ஆகியனவும் உள்ளடங்குகின்றன. இவை அனைத்தும், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு தங்களது பயணத்தை எளிமைப்படுத்தி வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த பேஷன் பக் பணிப்பாளர் ஷபீர் சுபியான்:
“இந்த திட்டத்திற்கான எமது பங்களிப்பு 2013ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வருடம் மீண்டும் அதில் பங்குகொள்வது பெருமைக்குரிய விடயமாகும். எமது நிறுவன பண்பாட்டின் மையமாக சமூக பொறுப்பு விளங்குகின்றது. அரசாங்கத்தின் கிளீன் ஶ்ரீ லங்கா திட்டம் தொடர்பான தூரநோக்கத்துடன் எமது பங்களிப்பை இணைக்கும் வகையில் நாம் செயற்பட்டு வருகிறோம் என்பதில் நாம் பெருமை அடைகிறோம்.” என்றார்.
இந்த சமீபத்திய மேம்படுத்தல்களை உத்தியோகபூவர்மாக கையளிக்கும் நிகழ்வில் பேஷன் பக் நிறுவனம் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களில் செயற்பாட்டு உதவிப் பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவி மேற்பார்வையார் டபிள்யு.எஸ். சந்தன, கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அத்தியட்சகர் எஸ்.எம்.எல். சிறிவர்தன, புகையிரத நிலைய அதிபர் பி.எஸ்.பி. மெண்டிஸ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
பல வருடங்களாக தொடர்ச்சியான சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளில் பேஷன் பக் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதில், கொழும்பு தேசிய வைத்தியசாலை வார்டுகளை புதுப்பித்தல், புகையிரத நிலையங்களில் அடையாள பெயர்ப் பலகைகள் நிறுவுதல் போன்ற முயற்சிகளும் உள்ளடங்குகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM