திரவப் பெற்றோலிய வாயு இலங்கையில் இறக்குமதி செய்வது மற்றும் சந்தை முன்னோடியாக திகழும் லிட்ரோ காஸ், Miss Tourism Sri Lanka சர்வதேச நிகழ்வுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையில் நடைபெறும் முதலாவது சர்வதேச அழகுராணி போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த 20 அழகுராணிகள் பங்கேற்கவுள்ளனர்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வின் மூலம் உள்நாட்டு அழகுராணிகள் தெரிவுத் துறை மேம்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இலங்கைக்கும் கீர்த்திநாமத்தை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்கும் நாடுகளில் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், சீனா, டென்மார்க், இந்தியா, இத்தாலி, ஜப்பான், லித்துவேனியா, லக்சம்பேர்க், மலேசியா, நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்ய குடியரசு, சிங்கப்பூர், இலங்கை, சுவீடன், தாய்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பங்குபற்றுநர்கள் பங்கேற்கவுள்ளனர்.

லிட்ரோ காஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சமிந்த எதிரிவிக்ரம கருத்து தெரிவிக்கையில், 

“தேசிய திரவப் பெற்றோலிய வாயு நிறுவனம் எனும் வகையில், இந்த அழகுராணிப் போட்டிக்கு எமது அனுசரணையை வழங்க வாய்ப்பு கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் துறை மற்றும் நாட்டை சர்வதேச நிலைக்கு கொண்டு செல்வதற்கு வாய்ப்பை வழங்குவதாக அமைந்திருக்கும். வளர்ந்து வரும் சுற்றுலா நாமமாக இலங்கையை வளர்ச்சியடைவதற்கு இது பெருமளவு வாய்ப்பாக அமையும்” என்றார்.

லிட்ரோ காஸை பொறுத்தமட்டில் விருந்தோம்பல் துறை என்பது முக்கியத்துவம் வாய்ந்த துறையாக அமைந்துள்ளது. எமது அனுசரணை செயற்பாட்டில் முதல் அங்கமாக இது அமைந்துள்ளதுடன், இது போன்ற செயற்பாடுகளை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்” என்றார். லிட்ரோ காஸ் அழகுராணி போட்டியில் பங்கேற்பவர்கள் மத்தியில் விநோத அம்சங்கள் உள்ளடங்கிய சமையல் போட்டியை அடுத்த மாதம் 19 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளது.

கண்ணைக்கவரும் வகையிலமைந்த கிரீடத்தில் இலங்கையின் கற்கள் அமைந்திருந்ததுடன், தற்போது இந்த கிரீடத்தை ஃபைன் ஜுவல்லரி கம்பனி வடிவமைத்த வண்ணமுள்ளது. இந்த போட்டியின் வெற்றியாளர் இந்த கிரீடத்தை அணியவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு பிரதிநிதியாக செயற்படுவார்.

பிரதான முடிக்குரிய பட்டத்துக்கு மேலதிகமாக, எட்டு மினி அழகுராணிப் பட்டங்களும் வழங்கப்படவுள்ளன, இவற்றில் Miss Talent, Best Catwalk Model, Best in Swimwear, Miss Congeniality, Miss Photogenic, Miss Personality, Best National Costume மற்றும் Best Evening Gown போன்றன உள்ளடங்கியுள்ளன.

இதன் மூலம் இலங்கை தொடர்பில் பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், போட்டியாளர்கள் நகரங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் உள்நாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைக்குறிக்கும் வெவ்வேறு செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பெருமளவு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். உள்நாட்டு பயண மற்றும் விருந்தோம்பல் துறை, அழகியல் துறை மற்றும் மேலும் பல அரச உரிமையாண்மையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையில் திரவ பெற்றோலிய வாயு விற்பனையிலும் சந்தைப்படுத்தலிலும் சந்தை முன்னோடியாக லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் (LGLL) செயற்படுகிறது. இணை நிறுவனமான லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவட் லிமிட்டெட் உடன் இணைந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

லிட்ரோ காஸ் வர்த்தக நாமத்தின உரிமையாண்மையை நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த தனது 5000 விற்பனை மையங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு நியமங்களைக் கடுமையாக பேணுவதற்காக லிட்ரோ காஸ் நன்மதிப்பைக் கொண்டுள்ளது. கம்பனியின் கொள்கையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுகிறது.