இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இன்று வவுனியாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இம்மாதம் 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விஷேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
குறிப்பிட்ட விஜயத்தின்போது பிரதம நீதி அரசரின் பணிப்புரைக்கு அமைவாக இன்று வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் மாலை 5 மணியளவில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி. எல். ஏ. மனாப் மற்றும் வவுனியா,மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகளுடன் எமர்ஷன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
குறிப்பிட்ட சந்திப்பிலே தற்கால நீதிமன்ற சூழ்நிலைகள், மற்றும் சட்டம் தொடர்பில் விஷேடமாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.