முல்லைத்தீவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (16) ஏற்பட்ட தீயில் உணவகமும் பாதணி கடையும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப் பிரிவு இல்லாத காரணத்தினால், இராணுவம், பொலிஸார், அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் இணைந்து தீயினை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, நிலைமையை பார்வையிட்டனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீ பரவல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது :
முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை வைத்தியாசாலை முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் அந்த உணவகமும் அதனருகில் உள்ள பாதணிகள் கடையும் தீயில் முற்றாக எரிந்துள்ளன.
தீ வேகமாக பரவிவருவதனால் அருகருகில் உள்ள கடைகளில் காணப்படும் பொருட்கள் துரித கதியில் அகற்றப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்புப் பிரிவு இதுவரை அமைக்கப்படவில்லை. இவ்வாறாக தீ பரவும் சந்தர்ப்பங்களில் தீயணைப்புக் கருவி இல்லாத காரணத்தினாலேயே பெரும் அசம்பாவிதங்களை தாம் எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM