யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மனித புதைகுழி காணப்படும் நிலையில் , முதல் கட்ட அகழ்வு பணிகளில் 19 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை 45 நாட்களுக்கு மேற்கொள்ள யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றதும் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களையும் ஈடுபடுத்தும் முகமாக , அதற்கான அனுமதிகளை வழங்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரியினால் யாழ்ப்பாண பல்கலைகழகத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM