இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சியில் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்கு குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதன்போது பாராட்டினார்.
'இலங்கையின் மீட்பு பாதை - கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தொனிப்பொருளில் இன்று திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில் அவர் கலந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான வலுவான ஈடுபாட்டை ஆதரித்தார். இது அண்மைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவியாக உள்ளது என்றும் இந்த கூட்டாண்மை வலுவான பொருளாதார அடிப்படைகளுக்கு அடித்தளமிட உதவியதாகவும் நிலைத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு அவசியமென்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM