ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)தெரிவித்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று திங்கட்கிழமை (16) மாலை 04:00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரி மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகள் (DSDs) மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை 2 ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் (DSDs) மற்றும் அதை அண்டிய பகுதிகளுக்கு முதலாம் நிலை 1 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
கொழும்பு: பாதுக்க பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
காலி: எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
களுத்துறை: வலல்லாவிட்ட, மத்துகம, புலத்சிங்கள, பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டி.எஸ்.டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
கண்டி: கங்கை இஹல கோரளை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
நுவரெலியா: அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
கேகாலை: தெரணியகல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
இரத்தினபுரி: எஹலியகொட, கலவான, பெல்மடுல்ல, நிவித்திகல, குருவிட்ட மற்றும் எலபாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM