வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள காணி மற்றும் புகையிரதம் செல்லும் ஓட்டமாவடி பழைய பாலத்தின் புகையிரதப் பாதை ஆகியவைகளில் தீப்பரவல் ஏற்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள காணியில் குப்பைகளுக்கு தீ வைக்கும் போது அங்கு தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை, ஓட்டமாவடி பழைய பாலம் புகையிரத வண்டி மாத்திரம் செல்லுவதற்கு பயன்படுத்தப்படும் பாதையாகும் அந்த பாலத்தினூடாக வேறு வாகனங்கள், பாதசாரிகள் எவரும் பயணிக்காத நிலையில் மர்மமான முறையில் தீ பிடித்துள்ளது.
இரு இடங்களிலும் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவ இடத்திற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதேச சபை செயலாளர் எஸ்.ஏ.அமீர் (சமீம்) வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் வருகை தந்து தீ பரவியதற்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM