(எம்.மனோசித்ரா)
கொழும்பு மாநகரசபையின் மேயரைத் தெரிவு செய்வதற்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தெரிவு செய்துள்ள வேட்பாளர் அதற்கு பொறுத்தமற்றவர். திங்கட்கிழமை (16) நாம் இது குறித்து தீர்மானிப்போம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பதே எமது எதிர்பார்ப்பாகும். கட்சி ரீதியாக நாம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ள போதிலும், இதுவரையில் பொது வேட்பாளரொருவர் முன்னிறுத்தப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சகா ஒருவரை வேட்பாளராகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
எவ்வாறிருப்பினும் அந்த வேட்பாளர் தொடர்பில் எம்முடன் எந்த பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. முன்னிலைப்படுத்தப்படும் வேட்பாளர் கொழும்பு மாநகரசபையை நிர்வகித்துச் செல்லக் கூடிய பலம் பொறுந்தியவராக இருக்க வேண்டும். அதேபோன்று அடிப்படைவாதங்களுக்கு இடமளிக்காத ஒருவராகவும் அவர் இருக்க வேண்டும். இந்த தகுதிகளை பூர்த்தி செய்யும் ஒருவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் அவருக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்.
ஏனைய சில சபைகளில் இடம்பெற்ற சில பிரச்சினைகள் காரணமாகவே நாம் அவற்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பிலும் கலந்து கொள்ளவில்லை. யாருக்கும் தனிப்பட்ட ரீதியில் நன்மை கிடைக்கும் வகையிலான தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளிக்கப் போவதில்லை. மக்களுக்கு சேவையாற்றக்கூடிய தகுதியான நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்பதே எமது கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானமாகும்.
எந்த வகையிலும் பதவிகளை அடிப்படையாகக் கொண்டு நாம் தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை. இங்கு பிரதான பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கே காணப்படுகிறது. காரணம் எதிர்க்கட்சிகளில் அக்கட்சிக்கே அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் அவர்கள் இன்னும் எம்மிடம் எவ்வித ஒத்துழைப்பினையும் கோரவில்லை. திங்கட்கிழமை (16) நாம் தீர்மானமொன்றை எடுப்போம். எந்த சந்தர்ப்பத்திலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள இரு வேட்பாளர்களுமே கொழும்பு மாநகரசபை மேயராவதற்கு பொறுத்தமற்றவர்கள் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM