bestweb

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

Published By: Vishnu

16 Jun, 2025 | 02:49 AM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது.

இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அத்துடன் கசுன் ராஜித்த, அறிமுக வீரர் இசித்த விஜேசுந்தர ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை குழாத்தில் இடம்பெறும் பசிந்து சூரியபண்டார, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, இசித்த விஜேசுந்தர ஆகிய நால்வரும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

ஆரம்ப வீரர் லஹிரு குமார ஓரே ஒரு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

ஆறு வருடங்களுக்கு பின்னர் சுழல்பந்துவீச்சாளர் அக்கில தனஞ்சய டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவதுடன் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஏ அணிக்கான போட்டிகளிலும் பிரகாசித்த ஐந்து வீரர்கள் அறிமுக வீரர்களாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக காலியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய அக்கில தனஞ்சய இம்முறை 7 உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் 34 விக்கெட்களை வீழ்த்தி சுழல்பந்துவீச்சாளர்களில் சிறந்து  விளங்கினார்.

அத்துடன் 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர் 33 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த ஆரம்ப வீரர் லஹிரு உதார (9 போட்டிகளில் ஒரு இரட்டைச் சதத்துடன் 787 ஓட்டங்கள்), மத்திய வரிசை வீரர் பசித்து சூரியபண்டார (8 போட்டிகளில் 2 சதங்களுடன் 620 ஓட்டங்கள்), மற்றொரு மத்திய வரிசை வீரரான பவன் ரத்நாயக்க (8 போட்டிகளில் 542 ஓட்டங்கள்), சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் சோனால் தினூஷ (4 போட்டிகளில் 255 ஓட்டங்கள், 8 விக்கெட்கள்), சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க (8 போட்டிகளில் 52 விக்கெட்கள்), இசித்த விஜேசுந்தர (44 முதல்தர போட்டிகளில் 112 விக்கெட்கள்) ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட வீரர்கள் எதிர்பார்த்தது போல குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

இலங்கை டெஸ்ட் குழாம்

பெத்தும் நிஸ்ஸன்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால தினூஷ, பவன் ரத்நாயக்க, ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அக்கில தனஞ்சய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, இசித்த பெர்னாண்டோ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46
news-image

குசல் மெண்டிஸ் அபார சதம் குவிப்பு;...

2025-07-08 18:56:13
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

2025-07-08 14:57:12
news-image

சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான்...

2025-07-08 09:47:46
news-image

மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாணில் பங்குபற்றிய ...

2025-07-07 15:55:09
news-image

இலங்கை ரி20 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2025-07-07 15:25:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: கடைசி நேர...

2025-07-06 23:40:30
news-image

இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்து டெஸ்ட்...

2025-07-06 23:28:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: அரை இறுதிக்கு...

2025-07-06 13:12:49
news-image

கில் ஓட்டமழை பொழிந்து அபார சாதனை...

2025-07-06 10:16:29
news-image

இலங்கையுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-07-05 22:55:01
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 249 ஓட்டங்கள்

2025-07-05 18:50:24