(செ.சுபதர்ஷனி)
மத்திய மருந்து களஞ்சியசாலையில் 180 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பினும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கான பற்றாக்குறை ஏற்படாது. பிரதேச மருந்து களஞ்சியசாலையில் தேவையான மருந்துகள் உள்ளதுடன் தேவை ஏற்படின் அவற்றை வெளியில் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக பதில் அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்
மருந்து பற்றாக்குறைத் தொடர்பில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள அரச மருத்துவ மனைகளில் உயர்தர மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு சில தரப்பினர் ஊடகங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். உண்மையில் அரச மருத்துவ மனைகளில் அவ்வாறு நீரிழிவு மற்றும் உயர் குருதியழும் உள்ளிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை. எனினும் குறிப்பிட்ட ஒரு சில மருந்து விநியோக நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளமைத் தொடர்பில் தெரியவந்துள்ளது.
அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது இன்று நேற்று அல்ல இந்நாட்டில் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சனையாக உள்ளது. ஆகையால் அதற்கு முழுமையான தீர்வை வழங்க சுகாதார அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இந்நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மத்திய மருந்து களஞ்சியசாலையில் உள்ள தரவுகளை மாத்திரம் கொண்டு அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது.
மருத்துவமனை மருந்து களஞ்சியசாலையில் தரவுகளும் எம்மிடம் உள்ளது. திடிரென மருந்து தட்டுப்பாடு ஏற்படுமாயின் அதனை நிவர்த்தி செய்ய அவசியமான செயற்திட்டமும் எம்மிடம் உள்ளது. மத்திய மருந்து களஞ்சியசாலையில் 180 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பினும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கான பற்றாக்குறை ஏற்படாது. பிரதேச மருந்து களஞ்சியசாலையில் தேவையான மருந்துகள் உள்ளன. மேலும் தேவை ஏற்படின் அவற்றை வெளியில் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னர், நோயாளருக்கு வழங்கப்படும் ஒரு வகை மருந்துக்கான மருந்து விநியோக செயல்பாடு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. ஆகையால் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் இரு வாரங்களில் 10 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் நாட்டை வந்தடைய உள்ளன. அவை கிடைக்கப்பெறும் வரை வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்தை பெற்றுக் கொள்ள பிறிதொரு நடவடிக்கையும் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM