bestweb

ஐ லீக் முதலாம் கட்ட முடிவுகள்: நியூ ஸ்டார், ரெட் ஸ்டார், சோண்டர்ஸ், ஜாவா லேன் வெற்றி

Published By: Vishnu

15 Jun, 2025 | 10:47 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் எம்.ஐ. அன்தனி மணிவண்ணனை தலைவராகக் கொண்ட கொழும்பு, செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள எட்டு அணிகளுக்கு இடையிலான ஐ லீக் கால்பந்தாட்டத்தின் முதலாம் கட்டப் போட்டிகளில் நியூ ஸ்டார், ரெட் ஸ்டார், சோண்டர்ஸ், ஜாவா லேன் வெற்றி பெற்றன.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐ லீக் கால்பந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டிகளில் பிரபல கழகங்களான களுத்துறை புளூ ஸ்டார், கொட்டாஞ்சேனை றினோன் ஆகியவற்றை அதிர்ச்சியில் ஆழ்த்தி கொழும்பு நியூ ஸ்டார் மற்றும் பேருவளை தர்கா நகர் ரெட் ஸ்டார் அணிகள் அபார வெற்றிகளை ஈட்டின.

தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் மாளிகாவத்தை யூத், மொரகஸ்முல்லை ஆகிய அணிகளை சோண்டர்ஸ், ஜாவா லேன் ஆகிய அணிகள் வெற்றிகொண்டன.

இந்த சுற்றப் போட்டியில் எட்டு கழகங்கள் இரண்டு குழுக்களில் மோதுகின்றன.

ஏ குழுவில் புளூ ஸ்டார் கழகத்துடனான போட்டியில்சிறந்த வியூகஙங்களுட ன்   அபரிமிதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய நியூ ஸ்டார் கழகம் மிகத் திறமையாக விளையாடி 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

புளூ ஸ்டார் கழகத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நியூ ஸ்டார் கழகம் போட்டியின் 9 ஆவது   நிமிடத்தில் மொஹமத் அவ்லால் மூலம் கோல் போட்டு முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து புளூ ஸ்டார் கழகம் தடுத்தாடும் வியூகங்களுடன் விளையாட நிர்ப்பந்திக்கப்டப்டடது. இதன் காரணமாக நியூ ஸ்டார் கழகத்தின் கோல் போடும் பல முயற்சிகள் தடுக்கப்பட்டது.

அதேவேளை கோல் நிலையை சமப்படுத்துவதற்கான முயற்சியிலும் புளூ ஸ்டார் ஈடுப்பட்டது.

ஆனால், தடுத்தாடுவதிலும் எதிர்த்தாடுவதிலும் புளூ ஸ்டார் கழகத்தை விஞ்சிய நியூ ஸ்டார் கழகம் போட்டியின் 64ஆவது நிமிடத்தில் மொஹமத் சாஹி மூலம் மேலும் ஒரு கோலைப் போட்டது.

இதனால் பெரு உற்சாகம் அடைந்த நியூ ஸ்டார் கழகம் கோல் எண்ணிக்கை அதிகரிக்க முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சிகள் யாவும் கைகூடாதபோதிலும் அபார வெற்றியீட்டி திருப்தி அடைந்தது.

இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற பி குழுவுக்கான மிகவும் பரபரப்பான போட்டியில் றினோன் கழகத்தை 2 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் ரெட் ஸ்டார் கழகம் வெற்றிகொண்டது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் கோல் போடும் வாய்ப்புகளை தவறவிட்டன.

போட்டியின் 28ஆவது நிமிடத்தில் றினோன் கழகத்தின் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி என்.சி.எம். ரஹ்மான் மிகவும் அருமையான கோல் ஒன்றைப் போட்டு ரெட் ஸ்டார் அணியை முன்னிலையில் இட்டார்.

Photo red star vs renown 

இதனைத் தொடர்ந்து போட்டியில் சூடுபிடிக்கத் தொடங்கியதுடன் அவ்வப்போது சில வீரர்களின் முரட்டுத்தனத்தை காணக்கூடியதாக இருந்தது.

இடைவேளையின் போது  ரெட் ஸ்டார் 1 - 0 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னரும் இரண்டு அணியினரும் கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட வண்ணம் இருந்தனர்.

எவ்வாறாயினும் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் வீரர் எம்.ஆர்.எம். ரபாக் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்.

இதனைத் தொடர்ந்து கடுமையாக விளையாடிய றினோன் கழகம் அதன் நட்சத்திர வீரர் எம்.எவ்.எம். ஆக்கிப் மூலம் கோல் ஒன்றைப் போட்டது.

அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த றினோன் வீரர்கள் கடுமையாக முயற்சித்தபோதிலும் அது கைகூடாமல் போக ரெட் ஸ்டார் கழகம் அபார வெற்றியை ஈட்டியது.

சோண்டர்ஸுக்கு இறுக்கமான வெற்றி

சொண்டர்ஸ் கழகத்துக்கும் மாளிகாவத்தை யூத் கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற ஏ குழுவுக்கான போட்டியில் சோண்டர்ஸ் கழகம் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இரண்டு அணியினரும் விறுவிறுப்பாக விளையாடிய போதிலும் கோல் போடுவதில் பல சந்தர்ப்பங்களில் கோட்டை விட்டனர்.

போட்டியின் 79ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட சோண்டர்ஸ் வீரர் ஏ. அஸீஸ் திறமையான கோல் ஒன்றைப் போட்டார். அதுவே அவ்வணியின் வெற்றி கோலாக அமைந்தது.

ஜாவா லேனுக்கு அவசியமான வெற்றி

ஜாவா லேன் கழகத்துக்கும் மொரகஸ்முல்லை கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற பி குழுவுக்கான போட்டியில் ஜாவா லேன் கழகம் 4 - 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் போட்டு சமநிலையில் இருந்தன.

கோல் மழை பொழியப்பட்ட இப் போட்டியில் ஜாவா லேன் கழக வீரர் மாலக்க பெரேரா 3 கோல்களை தனி ஒருவராகப் போட்டு அசத்தினார்.

போட்டியின் முதலாவது கோலை மொரகஸ்முல்லை சார்பாக டி. ரி. டி சில்வா (15 நி.) புகுத்தினார்.

ஆனால், ஜாவா லேன் சார்பகா எம்.ஏ. அக்ரம் (22 நி.), மாலக்க பெரேரா (36 நி.) ஆகிய இருவரும் கோல்களைப் போட்டு தங்களது அணியை முன்னிலையில் இட்டார்.

எவ்வாறாயினும் இடைவேளைக்கு சில செக்கன்கள் இருந்தபோது டி. ரி. டி சில்வா தனது இரண்டாவது கோலை போட்டு மொரகஸ்முல்லை சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளைக்குப் பின்னர் மாலக்க பெரேரா (69 நி.இ, 77 நி.) மேலும் இரண்டு கோல்களைப் போட்டு ஜாவா லேனை முன்னிலையில் இட்டார்.

அவர் கடைசியாக போட்ட கோல் சர்ச்சையைத் தோற்றுவித்தது. ரி பவுண்ட் பந்தை நோக்கி ஓடுவதற்கு முன்னர் மாலக்க பெரேரா ஒவ் சைட் நிலையிலிருந்தார். ஆனால், உதவி மத்தியஸ்தரின் கவனக்குறைவால் கள மத்தியஸ்தரால் அது கோலாக அங்கீகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் மொரகஸ்முல்லை சார்பாக உபாதையீடு நேரத்தில் டி. மதுஷன்க கோல் போட்டு அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

ஆனால், உபதையீடு நேரத்தில் கடைசி நான்கு நிமிடங்கள்  தடுத்தாடும் உத்தியை திறமையாகக் கடைப்பிடித்த ஜாவா லேன் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46
news-image

குசல் மெண்டிஸ் அபார சதம் குவிப்பு;...

2025-07-08 18:56:13
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

2025-07-08 14:57:12
news-image

சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான்...

2025-07-08 09:47:46
news-image

மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாணில் பங்குபற்றிய ...

2025-07-07 15:55:09
news-image

இலங்கை ரி20 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2025-07-07 15:25:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: கடைசி நேர...

2025-07-06 23:40:30
news-image

இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்து டெஸ்ட்...

2025-07-06 23:28:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: அரை இறுதிக்கு...

2025-07-06 13:12:49
news-image

கில் ஓட்டமழை பொழிந்து அபார சாதனை...

2025-07-06 10:16:29
news-image

இலங்கையுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-07-05 22:55:01
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 249 ஓட்டங்கள்

2025-07-05 18:50:24