சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் யோகாப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றிருந்தது.
யோகா, கராத்தே, சிலம்பம், வர்மக்கலை துறைகளினுடைய மாஸ்டர் ஜெயம் ஜெகனின் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30 மணியளவில் குறித்த போட்டி நிகழ்வானது ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று நிலைகளை பெறுவோருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும், பங்குபற்றியோர், வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் சர்வதேச யோகா தினமான ஜூன் மாதம் 21 ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொன் விழா மேடையில் வைத்து வழங்கி வைக்கப்பட இருக்கின்றது.
குறித்த நிகழ்வில் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் , முல்லை கோட்டக்கல்வி அதிகாரி திருக்குமரன், சர்வதேச சாதனையாளர் அகில திருநாயகி, ஓய்வு நிலை பிரதிகல்வி பணிப்பாளர் பேரின்பநாயகம், எண்ணூறுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM