அதிகரித்துவரும் தற்கொலைகளிலிருந்து இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் ஞாயிற்றுக்கிழமை (15) மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
பாடசாலையின் மாணவர்கள்,பழைய மாணவர்கள் ஆகியோரின் ஏற்பாட்டிலும் பங்குபற்றுதலுடனும் சிறப்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் கு.பாஸ்கரன் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் இந்த சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையில் ஆரம்பித்த சைக்கிள் பவனியானது சவுக்கடி வீதி,விநாயகபுரம் வீதி,முருகன்கோவில் வீதி சென்று ஜனாதிபதி வீதியூடாக பாடசாலையினை வந்தடைந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இளம்வயதினர் தற்கொலைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடாத்தப்பட்ட இந்த சைக்கிள் பவனியின்போது தற்கொலைகளை தடுப்பது குறித்தான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM