(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார். இவர் சனிக்கிழமை (14) நாட்டை வந்தடைந்தார்.
கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி நிர்வாக பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 'இலங்கையின் மீட்பு பாதை - கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தொனிப்பொருளில் திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இலங்கை விஜயம் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ' இலங்கை, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவிற்கான எனது பயணங்களைத் தொடங்க கொழும்புக்கு வந்துள்ளேன். பிராந்தியத்திற்கான பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் சர்வதே நாணய நிதியத்தின் முயற்சிகளை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பது குறித்து ஆராய்வதற்கு அதிகாரிகள், சிவில் சமூகம் மற்றும் வணிகத் தலைவர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
'இலங்கையின் மீட்புப் பாதை : கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டு மாநாட்டிற்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில் ஆர்வமாகவுள்ளேன். இந்த நிகழ்ச்சியின் மையப் புள்ளி, இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் வரவிருக்கும் சவால்களுக்கான அவற்றின் தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பைக் குறிக்கிறது.' எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM