(எம்.வை.எம்.சியாம்)
இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள 10 பில்லியன் (அ.டொலர் 1.4) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக கருதியமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட
ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை பூர்த்தி செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள “Balance of Payments Manual, 6th edition” அறிக்கைக்கு அமைய வெளிநாட்டு சொத்து இருப்பானது திரவத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் அல்லது நிபந்தனையற்ற முறையில் உடனடியாகக் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஆனால் நாணய பரிமாற்றம் இதனை நிறைவேற்ற தவறியுள்ளது. ஏனெனில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்டுபட்டு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் குறித்த நிபந்தனைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.அந்த வகையில் வெளிநாட்டு ஒதுக்கீடாக அங்கீகரிக்கப்படாத சொத்துகளைச் சேர்ப்பதனால் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.
உதாரணமாக 2025 மே மாதத்தில் மத்திய வங்கி அறிவித்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 6.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.சர்வதேச தரநிலைக்கேற்ப கணக்கிட்டிருந்தால் இது சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்க வேண்டும்.
மேலும் இந்த தவறான கணக்கீட்டைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் இரண்டு விதமான கணக்கீடுகளை (சீன மக்கள் வங்கி) சேர்த்ததும் சேர்க்காததும் பயன்படுத்தி ஒரு காலப்புள்ளியிலிருந்து மற்றொரு காலப்புள்ளிவரை வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பை ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முயற்சித்துள்ளனர்.
இதனால் 2022 ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வெளிநாட்டு ஒதுக்கங்களின் அதிகரிப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துபோகும் பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை என்னவெனில் IMF தனது ஊழியர் அறிக்கைகளில் 'பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் ( (usable reserves)” )' எனக் குறிப்பிடும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்வதே ஆகும்.இதில் பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்க சொத்துகளுக்கான வரையறையை பூர்த்தி செய்யாத எந்தவொரு சொத்தும் உள்வாங்கப்படாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM