(எம்.மனோசித்ரா)
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கின்றனர். அதற்கமைய இன்று நாம் கொழும்பில் ஆட்சியமைப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதனை விடுத்து சஜித், நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக் கூறினால் அது கொழும்பு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தம்புத்தேகம வைத்தியசாலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கின்றனர். எமது குழுக்களையே நாம் தேர்தலில் களமிறக்கியிருந்தோம். எதிர்க்கட்சி என்ற ஒன்று போட்டியிடவில்லை. வெ வ்வேறு கொள்கைகள், வெ வ்வேறு வேலைத்திட்டங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என ஒவ்வொரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.
அந்த வகையில் கொழும்பு மாநகரசபையில் ஆட்சிமைப்பதற்கான மக்கள் ஆணை எமக்கே கிடைத்திருக்கிறது. கொழும்பை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது. எனவே கொழும்பு மாநகரசபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். எனவே சஜித், நாமல் போன்றோர் இணைந்து கொழும்பில் ஆட்சியமைப்பதாகக் கூறினால் அது கொழும்பு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
எனவே தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பளித்து அவர்கள் விலகிக் கொள்வதே சிறந்தது. அவ்வாறில்லை என்றாலும், நாமே ஆட்சியமைப்போம். நாம் யாருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம், எமக்கு ஆதரவளிப்பவர்கள் யார் என்பதை மேயர் தெரிவின் போது அறிந்து கொள்ள முடியும். எமக்கு 50 சதவீதம் இல்லாவிட்டாலும், பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம். அந்த வகையில் பார்த்தாலும் மக்கள் ஆணையை எமக்கே வழங்கியிருக்கின்றனர். நாம் கொழும்பில் ஆட்சியமைப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM