இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே தலைவர் கோலியுடனான ஏற்பட்ட மோதல் காரணமாக பதவி விலகினார். இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு இந்திய கிரிக்கெட் சபைக்கு 10 பேர் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.