மலையக பகுதிகளில் உள்ள பெரும் தோட்டங்களில வாழும் மக்கள் சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு இன்றுவரை முகம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தலவாக்கலை பிரவேச செயலக நிர்வாகத்திற்கு உட்பட்ட டயகம பகுதியில் உள்ள பிரதேச பைத்தியசாலை தொடர்ச்சியாக பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் அங்கு பணிபுரியும் சுகாதார அதிகாரிகளின் அலட்சிய போக்கினை கொண்டும் இயங்கி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு இந்த வைத்தியசாலையில் நிலவும் அலட்சியப் போக்கு மற்றும் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (15) பிரதேச மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
குறிப்பாக வைத்தியசாலையில் பணியாற்றும் அதிகாரிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையை நோக்கி வரும் நோயாளிகளை கண்டு கொள்வதில்லை என்றும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சைகளை துரிதமாக வழங்குவதில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.
ஏதாவது ஒரு விபத்தில் காயமடைந்த நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் மேலும் பல நோயாளர்கள் வருகை தந்தால் மாத்திரமே காயங்களுக்கு மறந்து போக முடியும் என வைத்தியசாலையின் தாதியர்கள் உட்பட அனைவரும் தெரிவிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனின் டயகம வைத்திய சாலையில் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை என்றும் இதன் காரணமாக மக்கள் தமது சொந்த பணத்தைக் கொண்டு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களிலேயே நோயாளிகளை வேறு வைத்தியசாலைக்கு கொண்டு பொய் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
அதேபோல், குறித்த வைத்தியசாலைக்கு செல்லும் வீதியும் மிக மோசமான நிலையில் இருப்பதன் காரணமாக அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றது. என்றும் சில சந்தர்ப்பங்களில் நோயாளிகள் மரணித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் கலந்து கொண்டதுடன் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பினை மக்கள் வெளிப்படுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM