bestweb

இறுதி சடங்கில் உயிரோடு எழுந்த வயோதிபர்

Published By: Digital Desk 3

15 Jun, 2025 | 02:55 PM
image

இந்தியாவில் மும்பையில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் இறுதி சடங்கில் உயிரோடு எழுந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையை அடுத்த உல்லாஸ்நகர் கேம்ப் நம்பர் - 4 பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவர் புற்றுநோய்க்கு வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை (14) காலை வயோதிபரின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவரது மகன் வயோதிபரை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வயோதிபரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் வயோதிபர் உயிரிழந்த விட்டதாக சான்றிதழும் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் வயோதிபரை வீட்டுக்கு கொண்டுச் சென்று இறுதி சடங்கிற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் வயோதிபரின் இதயம் துடிப்பதை குடும்பத்தினர் கவனித்துள்ளனர். உடனடியாக அவர்கள் வயோதிபரை உல்லாஸ்நகரில் உள்ள மற்றொரு தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது வயோதிபர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. தற்போது அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே மனிதநேய அடிப்படையில் தான் வயோதிபருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதாக சம்பந்தப்பட்ட தனியார் வைத்தியசாலை  வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உயிருடன் இருந்தவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியது தவறுதான். அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் கூறினர். எனவே மனிதநேய அடிப்படையில்தான் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கினேன்" என்றார்.

உயிருடன் இருந்த நபரை இறந்து விட்டதாக வைத்தியர் அறிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின்...

2025-07-11 12:35:30
news-image

காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள்...

2025-07-11 10:13:28
news-image

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா...

2025-07-10 11:35:24
news-image

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி...

2025-07-10 09:31:21
news-image

இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியதில்...

2025-07-09 15:47:59
news-image

சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு...

2025-07-09 14:48:18
news-image

விமான நிலையத்தில் காலணிகளை அகற்றத் தேவையில்லை...

2025-07-09 14:39:14
news-image

குஜராத் வதோதராவில் பாலம் இடிந்து விபத்து:...

2025-07-09 14:26:13
news-image

இந்திய தாதி பிரியாவிற்கு 16ம் திகதி...

2025-07-09 13:54:57
news-image

100 வயதை கடந்த கம்பீரம்’ -...

2025-07-09 12:41:46
news-image

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 160...

2025-07-09 12:21:38
news-image

பிரான்ஸின் மார்சேயில் பாரிய காட்டுத் தீ...

2025-07-09 12:42:03