டுபாய் நாட்டில் ஹபாயா துணிக்கடைக்கு வந்த இரு இளம் பெண் வாடிக்கையாளர்களை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்தமைக்காக அந்நாட்டு பொலிஸார் இலங்கை பிரஜை ஒருவரை கைது செய்துள்ளது.

டுபாய் நாட்டில் பணி புரிந்து வரும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரே பெண்கள் உடை மாற்றும் அறையினுள் மறைந்திருந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

தன்னை ஒருவன் புகைப்படம் எடுப்பதை உணர்ந்த அப்பெண் கூச்சலிடவே அக்கடையிலிருந்த அனைவரும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர் இதனால் பீதியடைந்த இளைஞர் கைப்பேசியை விட்டு விட்டு ஓட முயற்சி செய்தவேளை துணிக்கடையின் காவலாளர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அவரது கைப்பேசியை சோதனையிட்ட போது மறைந்திருந்து திருட்டுத்தனமாக படம் எடுத்தது ஊர்ஜீனமானதோடு இன்னும் பல அழகிகளின் புகைப்படங்களும் இருந்துள்ளன.

மேலும்  குறித்த நபரை பொலிஸாரிடம் துணிக்கடை ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அந்நாட்டின் சட்டத்திற்கு அமைய இளைஞனுக்கு 3 மாதக்கால கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளதோடு தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அந்நாட்டை விட்டு வெளியேறவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக டுபாயிலுள்ள இலங்கை தூதகரம் குறித்த தகவல் வெளியிட்டுள்ளது.