தமிழில் தயாராகும் ஒவ்வொரு திரைப்படத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவனாக திகழ்வது அப்படத்தின் பாடல்கள் தான். ஒரு படத்தின் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்றால்.. அதுவே அப்படத்தின் வணிகத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாறுகிறது.
இதற்கு பல உதாரணங்களை கூறலாம். இந்நிலையில் இயக்குநராகவும் , நடிகராகவும் , பாடலாசிரியராகவும் , இசையமைப்பாளராகவும் அறியப்படும் 'கருப்பு கண்ணாடி' புகழ் மிஷ்கின் தற்போது 'லவ் மேரேஜ்' எனும் படத்திற்காக பாடிய பாடல் ... இணையத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
எதிர்வரும் 27 ஆம் திகதியன்று வெளியாகும் இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக் , முருகானந்தம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற 'எனக்கு டார்ச்சர் நான் தான்டா பங்கு..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்காக பிரத்யேகமாக படமாக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதி இருக்கும் இந்த பாடலை மிஷ்கின் பாடியிருக்கிறார்.
மிஷ்கினின் வசீகரிக்கும் குரலில் வெளியாகி இருக்கும் இந்தப் பாடல் இளைஞர்கள் கொண்டாடும் பாடலாக அமைந்திருப்பதால்... இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அத்துடன் இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையும் படைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM