ஒரு மில்லியனில் நான்கு பேருக்கு ரிலாப்சிங் பொலிகாண்ட்ரிடிஸ் எனப்படும் அரிய வகையினதான் குருத்தெலும்பு வீக்க பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், இது பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட இரு பாலினத்தவருக்கும் ஏற்படக்கூடும் என்றும், இதற்கு தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் நிவாரண சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரிலாப்சிங் பொலிகாண்ட்ரடீஸ் என்பது அரிய வகையில் மனிதர்களுக்கு ஏற்படும் தன்னுடல் தாக்க நோய் பாதிப்பாகும். அதாவது எம்முடைய ஆரோக்கியமான திசுவை நோய் எதிர்ப்பு மண்டலம் தாக்கி அழிப்பதாகும்.
இது பெரும்பாலும் மூச்சுக்குழாய், காது பகுதி , தொண்டை ஆகியவற்றில் உள்ள குருத்தெலும்புகளை இணைக்கும் திசுவின் ஏற்படுகிறது.
காது வலி, சுவாசித்தலில் சௌகரியம், காய்ச்சல், மூட்டு வலி, கண்கள் சிவத்தல், இதய பாதிப்பு ,பார்வை திறனின் குறைபாடு, சிறுநீரக கோளாறு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். மரபணு காரணமாகவும், விபத்து- தொற்று- நச்சு வெளிப்பாடு - ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதன் போது மருத்துவர்கள் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். அதனைத் தொடர்ந்து பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, அதற்குரிய நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்.
சிலருக்கு இத்தகைய சிகிச்சை ஓராண்டு வரை கூட நீடிக்கும். மேலும் இத்தகைய எந்த பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கும், வராமல் தடுப்பதற்கும் வைத்தியர்களின் ஆலோசனையை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
வைத்தியர் விக்னேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM