bestweb

சுவையான சிக்கன் வறுவல்

14 Jun, 2025 | 04:47 PM
image

சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்..........

தேவையான பொருட்கள்

  • ஒரு கிலோ சிக்கன்
  • இரண்டு பெரிய வெங்காயம்
  • 15அரைத்த சிறிய வெங்காயம்
  • மூன்று தக்காளி
  • இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்
  • ஒன்றரை ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
  • ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான அளவுகிரேவிக்கு பட்டை
  • சோம்பு
  • பிரிஞ்சி இலை
  • சிறிதளவுகருவேப்பிலை
  • தாளிக்க தேவையான அளவு எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு

செய்முறை

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை சோம்பு, பிரிஞ்சி இலை கருவேப்பிலை சேர்க்கவும் பிறகு அரைத்த வெங்காயம் நறுக்கிய வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  2. பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து சிக்கன் மசாலா மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
  3. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டுக் கொண்டிருந்தால் ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அரை மணி நேரத்தில் சிக்கன் வறுவல் தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right