இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Published By: Digital Desk 2

14 Jun, 2025 | 01:41 PM
image

இந்தியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின், அமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கடந்த 12 ஆம் திகதி நண்பகல் புறப்பட்டது.

அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்த்துக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.

ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்த, விமானம், அருகில் இருந்த மேகனிநகர் பகுதியில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து, வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த 19 பேர் என 265 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அவர்களில் குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர்.

பலியான பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதால், உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிந்து 6 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 274 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில், லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயம் அடைந்த அவர் அமதாபாத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேபோல் மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்த வைத்தியர்கள், மாணவர்கள் மற்றும் ஜே.பி. வைத்தியசாலை வளாகத்தில் இருந்தவர்கள் என பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார்...

2026-09-12 14:21:54
news-image

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை...

2026-09-12 14:11:35
news-image

இலங்கைத் தமிழரான கம்சி குணரட்ணம் நோர்வே...

2026-09-12 12:26:55
news-image

இந்தோனேசியா ஜகார்த்தாவில் பூமியதிர்ச்சி - பொதுமக்களுக்கு...

2026-09-12 11:09:01
news-image

பிலிப்பைன்ஸில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து...

2026-09-12 10:36:07
news-image

பிரான்ஸில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து...

2026-09-12 09:32:10
news-image

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இந்திய...

2026-09-11 15:07:46
news-image

9/11 பேரழிவு : அமெரிக்காவை உலுக்கிப்...

2026-09-11 14:47:24
news-image

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை...

2026-09-11 14:39:40
news-image

பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியவாதியுமான சாலமன்...

2026-09-11 14:13:15
news-image

நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார்...

2026-09-11 13:29:38
news-image

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை: சிட்னி...

2026-09-11 16:57:18