(நெவில் அன்தனி)
தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (13), 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை செல்வராசா நிருசிகா புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீற்றர் உயரத்தைத் தாவியே நிருசிகா புதிய சாதனை நிலைநாட்டினார்.
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வீராங்கனை எஸ்.கே. தர்மரட்ன 3.34 மீற்றர் உயரம் தாவி ஏற்படுத்திய சாதனையை நிருசிகா முறியடித்து புதிய சாதனைக்கு உரித்தானார்.
20 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் பாடசாலைகள் முழு ஆதிக்கம் செலுத்தி வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்தன.
அப் போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி (3.30 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை சிவரூபன் டிலக்ஷிகா (3.10 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வட மாகாணத்திற்கு மேலும் 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி வீரர் என். டன்ஸ்சன் 4.30 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இதே போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் எஸ். கஜானன் (4.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் முன்னாள் ஹாட்லி கல்லூரி மாணவன் எஸ். மிதுன்ராஜ் இராணுவம் சார்பாக போட்டியிட்டு 15.26 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியை 9 நிமிடங்கள், 25.91 செக்கன்களில் ஓடி முடித்த வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரர் இளங்கோ விகிர்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்குபற்றிய ரவிகுமார் தனுஷியா (1:10:39.47) தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்குபற்றிய ஜீவேஸ்வரன் தமிழரசி (1:07:57.46) வெண்கலபதக்கத்தையும் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்கபற்றிய எஸ். தனுசன் (9:52.58) வெண்கலப் பதக்கத்தையும் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் தேசிய பாடசாலை வீரர் கே. கிருஷான் (50.09) வெண்கலப் பதக்கத்தையும் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் திருக்கோவில் மெதடிஸ்த மிஷ்ன தமிழ் மகா வித்தியாலய வீரர் வினோதன் விஹாஸ் (47.86 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
மலையக வீரர்களுக்கும் பதக்கங்கள்
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் பதுளை மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக போட்டியிட்ட எஸ். விக்ணேஸ்வரன் (58:46.00) வெள்ளிப் பதக்கத்தையும் திகனை ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலை வீரர் டி. ஷாம்ராஜ் (59:21.71) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM