bestweb

ஐ லீக் கால்பந்தாட்டம் இன்று ஆரம்பம் ; இன்றைய போட்டிகள் புளூ ஸ்டார் - நியூ ஸ்டார்: றினோன் - ரெட் ஸ்டார்

14 Jun, 2025 | 11:49 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பூரண அனுமதியுடன் கொட்டாஞ்சேனை செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள ஐ லீக் அழைப்பு கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது  போட்டியில் களுத்துறை புளூ ஸ்டார் கழகமும் கொழும்பு நியூ ஸ்டார் கழகமும் மோதுகின்றன.

தொடரும் போட்டியில் கொட்டாஞ்சேனை றினோன் கழகத்தை தர்காநகர் ரெட் ஸ்டார் கழகம் எதிர்த்தாடவுள்ளது.

கலம்போ - சிட்டி சுப்பர் 8 கால்பந்தாட்டப் போட்டியை வெற்றிகரமாக நடத்திய எம். ஐ. அன்தனி மணிவண்ணன் தலைமையிலான செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம், ஐ லீக் அழைப்பு கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை மிகச் சிறப்பாக நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளது.

இந்த சுற்றுப் போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமருக்கும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அன்தனி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

'கால்பந்தாட்ட விளையாட்டை நாடு முழுவதும் வியாபிக்கச் செய்யும் குறிக்கோளுடன் நாங்கள் இரண்டாம் கட்டமாக ஐ லீக் அழைப்பு கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளோம். இந்த இரண்டாம் கட்ட கால்பந்தாட்டத்தில் கொழும்பையும் கொழும்பு பெரும்பாகத்தையும் சேர்ந்த எட்டு கால்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்ற முன்வந்துள்ளன. அக் கழகங்களுக்கு எமது கழகம் சார்பாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இத்தகைய உயரிய கால்பந்தாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்வது இலகுவான காரியமல்ல என சுட்டிக்காட்டிய  மணிவண்ணன், இப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தாராள அனுசரணை வழங்க முன்வந்த அனைத்து பெரு நிறுவனங்களுக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

'எல்லாவற்றுக்கும் மேலாக பல வருடங்களுக்கு பின்னர் காலபந்தாட்டம் மீண்டும் தனது கோட்டையான கொட்டாஞ்செனைக்கு - சுகததாச அரங்கிற்கு திரும்பியுள்ளது. ஐ லீக் கால்பந்தாட்டத்தில் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும் என ஏற்பாட்டுக் குழுவினராகிய நாங்கள் நம்புகிறோம். அதேவேளை, வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் மறக்க முடியாத தருணங்களை இந்த சுற்றுப் போட்டி ஊடாக பெறக்கூடியதாக இருக்கும் என்பது உறுதி' என மணிவண்ணன் தெரிவித்தார்.

ஐ லீக் காலப்ந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் கழகங்களின் வீரர்கள், கள மற்றும் உதவி மத்தியஸ்தர்கள், போட்டி தீர்ப்பாளர்கள் அனைவருக்கும் கவர்ச்சிகரமான சீரூடைகள் இலவசமாக வழங்கப்படும்.

ஏ குழு

புளூ ஸ்டார் கழகம் (களுத்துறை)

மாளிகாவத்தை யூத் கழகம்

நியூ ஸ்டார் கழகம் (கொழும்பு)

சோண்டர்ஸ் கழகம் (பிரைஸ் பார்க்)

பி குழு

ஜாவா லேன் கழகம் (கொம்பனித் தெரு)

மொரகஸ்முல்லை கழகம்

ரெட் ஸ்டார் கழகம் (தர்காநகர் பேருவளை)

றினோன் கழகம் (கொட்டாஞ்சேனை)

மொத்தப பணப்பரிசு 36 இலட்சம் ரூபா

சம்பியானகும் அணிக்கு 900,000 ரூபா

இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 700.000 ரூபா

அரையிறுதியுடன் வெளியேறும் 2 அணிகளுக்கு தலா 400,000 ரூபா

 முதல் சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா 300,000 ரூபா  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46
news-image

குசல் மெண்டிஸ் அபார சதம் குவிப்பு;...

2025-07-08 18:56:13
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

2025-07-08 14:57:12
news-image

சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான்...

2025-07-08 09:47:46
news-image

மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாணில் பங்குபற்றிய ...

2025-07-07 15:55:09
news-image

இலங்கை ரி20 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2025-07-07 15:25:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: கடைசி நேர...

2025-07-06 23:40:30
news-image

இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்து டெஸ்ட்...

2025-07-06 23:28:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: அரை இறுதிக்கு...

2025-07-06 13:12:49
news-image

கில் ஓட்டமழை பொழிந்து அபார சாதனை...

2025-07-06 10:16:29
news-image

இலங்கையுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-07-05 22:55:01
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 249 ஓட்டங்கள்

2025-07-05 18:50:24