மார்க்ராமும் பவுமாவும் தென் ஆபிரிக்காவை பெருமையின் விளிம்பில் இட்டுள்ளனர்; அவுஸ்திரேலியா மீண்டு வருமா?

14 Jun, 2025 | 10:08 AM
image

(நெவில் அன்தனி)

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றவாது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடும் தென் ஆபிரிக்கா வெற்றியின் விளிம்பில் இருக்கிறது.

ஏய்டன் மார்க்ராமும் அணித் தலைவர் டெம்பா பவுமாவும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 133 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை பெருமையின் விளிம்பில் இட்டுள்ளனர்.

282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் தென் ஆபிரிக்கா போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 69 ஓட்டங்களே தேவைப்படுகிறது.

இந் நிலையில் அவுஸ்திரேலியா மீண்டு வந்து தென் ஆபிரிக்காவின் 8 விக்கெட்களை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பந்துவீச்சாளர்கள் முதல் இரண்டு தினங்களில் ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களையும் தென் ஆபிரிக்கா 138 ஓட்டங்களையும் பெற்றன. அவுஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை (13), மிச்செல் ஸ்டாக், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனாக அவுஸ்திரேலியா 207 ஓட்டங்களைப் பெற்று 281 ஓட்டங்களால் முன்னிலை அடைந்தது.

மிச்செல் ஸ்டாக் 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

தொடர்ந்து 282 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ரெயான் ரிக்ல்டன் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (9 - 1 விக்.)

எனினும் ஏய்டன் மார்க்ராம், வியான் முல்டர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை நல்ல நிலையில் இட்டனர். முல்டர் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ஏய்டன் மார்க்ராம் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 159 பந்துகளில் 11 பவுண்டறிகள் உட்பட 102 ஓட்டங்களுடனும் டெம்பா பவுமா 121 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 212 (போ வெப்ஸ்டர் 72, ஸ்டீவன் ஸ்மித் 66, அலெக்ஸ் கேரி 23, கெகிசோ ரபாடா 51 - 5 விக்., மார்க்கோ ஜென்சன் 49 - 3 விக்.)

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 138 (டேவிட் பெடிங்ஹாம் 45, டெம்பா பவுமா 36, பெட் கமின்ஸ்,  28 - 6 விக்., மிச்செல் ஸ்டாக் 41 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 207 (மிச்செல் ஸ்டாக் 58 ஆ.இ., அலெக்ஸ் கேரி 43, மானுஸ் லபுஷேன் 22, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 17, கெகிசோ ரபாடா 59 - 4 விக்., லுங்கி எங்கிடி 38 - 3 விக்.)

தென் ஆபிரிக்கா - வெற்றி இலக்கு 282 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 213 - 2 விக். (ஏய்டன் மார்க்ராம் 102 ஆ.இ., டெம்பா பவுமா 65 ஆ.இ., வியான் முல்டர் 27, மிச்செல் ஸ்டாக் 53 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட...

2026-07-21 15:14:26
news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44