(நா.தனுஜா)
அமெரிக்க உதவியுடன் இஸ்ரேலினால் பலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பு முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் என கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி வலியுறுத்தியுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள், இஸ்ரேலிய அரசாங்கத்துடன் இலங்கை பேணிவரும் சகல தொடர்புகளையும் துண்டிக்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
'காஸாவில் இடம்பெற்றுவரும் இனவழிப்புக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் மகுடத்தில் மாற்றத்துக்கான இளைஞர்கள் அமைப்பினால் வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்துக்கு முன்பாக எதிர்ப்புப்போராட்டமொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்துக்கு ஏற்கனவே அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கத்தூதரகத்துக்கு முன்பாக முன்கூட்டியே பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறிருந்தும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து 'அமெரிக்க, இஸ்ரேலிய இரத்தவெறிப்போரை எதிர்ப்போம். காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக ஒன்றிணைவோம்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமாத்திரமன்றி 'உணவு என்பது போர் அல்ல', 'பலஸ்தீனத்துடன் இலங்கை உடன்நிற்கின்றது', 'பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை உடன் முடிவுக்குகொண்டுவரவேண்டும்', 'இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து இன்று எத்தனை சிறுவர்களைக் கொன்று அழித்தன?' எனும் வாசகங்களுடனான பதாகைகைளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
அத்தோடு சிலர் பலஸ்தீன கொடியையும், சடலம் போன்று சுற்றப்பட்ட பொம்மைகளையும் ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவத்திலான முகமூடிகளையும் அணிந்திருந்தனர்.
அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சார்பில் கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம், இஸ்ரேலினால் பலஸ்தீனத்தில் நிகழ்த்தப்பட்டுவரும் இனவழிப்புக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி தாம் ஒன்றுகூடியிருப்பதாகவும், இஸ்ரேலிய அரசாங்கத்துடன் இலங்கை பேணிவரும் சகல தொடர்புகளையும் துண்டிக்குமாறு தாம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM