bestweb

கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணையவில்லை - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

Published By: Vishnu

13 Jun, 2025 | 07:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக பிரதான எதிர்க்கட்சிகளுடன் பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணையவில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு அமைவாகவே எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளில் ஆட்சியமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்துள்ளமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியை காட்டிலும் எதிர்க்கட்சிகள் பெரும்பாலான ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய ஆணையை பலப்படுத்துவதற்காகவே எதிர்க்கட்சிகளுடன் பொது கொள்கையுடன் ஒன்றிணைந்துள்ளோம்.

கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணையவில்லை. எவ்வித கூட்டு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடவில்லை. நம்பிக்கை மற்றும் பொதுக் கொள்கை அடிப்படையின் மாத்திரமே ஒன்றிணைந்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் ஒருசில முறையற்ற செயற்பாடுகள் குறித்து கடந்த காலங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. தனித்த பெரும்பான்மையை உறுதிப்படுத்தாத உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சியமைப்போம்.

அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் சகல சக்திகளுடன் ஒன்றிணைவோம். நாட்டுக்கு பொருத்தமான அரசியல் மற்றும் பொதுக்கொள்கைகளை எதிர்க்கட்சிகள் பின்பற்றுமாயின் கொள்கை அடிப்படையில் இணக்கமாக செயற்படுவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-09 06:10:45
news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26