(இராஜதுரை ஹஷான்)
குளியாப்பிட்டி மற்றும் உடுபத்தாவ பிரதேச சபைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சிகளுடனான பொது இணக்கப்பாட்டுடன் பொதுஜன பெரமுன இந்த பிரதேச சபைகளில் ஆட்சி அமைத்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சி கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் மற்றும் ஆசனங்களுக்கு அமைய தனித்த பெரும்பான்மை பெற்றுக்கொள்ளாத உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளில் கொள்கை அடிப்படையில் ஆட்சியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டி உள்ளூராட்சிமன்ற ஆணையாளiர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக விஜேசிறி ஏக்கநாயக்கவின் பெயர் பிரதேச சபைத் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டது.
இந்த முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கின.இதற்கமைய விஜேசிறி ஏக்கநாயக்க குளியாப்பிட்டி பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் நேற்று முன்தினம் உடுபத்தாவ உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் நிஹால் ஜெயசிங்க பெரும்பான்மை வாக்குகளுடன் உடுபத்தாவ பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM