bestweb

தனவந்தராக உயர்வதற்கான பிரத்யேக வழிபாடு..!?

13 Jun, 2025 | 06:20 PM
image

இந்த மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையினதான பொருளாதார சூழலில் தங்களின் வாழ்க்கையை உருவாக்கி இருப்பார்கள். அதிலிருந்து சிறிது உயர்வதற்கான வழிமுறையை.. வழிகாட்டல் மூலமாகவோ அல்லது சுயமாகவோ சிந்தித்து அதில் பயணித்தும் கொண்டிருப்பர். 

ஆனால் அவர்களுக்கு உயர்வு என்பது அதாவது செல்வ நிலையில் உயர்வு என்பது எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவாகவே இருக்கும். அதே தருணத்தில் அவர்களுக்கான தேவை என்பது மறுபுறம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். 

இதனை சமநிலைப்படுத்துவதற்காகவாவது பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய வேண்டும் என மனதில் உறுதியை மேற்கொள்வார்கள். அத்துடன் அதற்கான முயற்சியில் ... தேடலில்... தொடர்ந்து கவனம் செலுத்தி வருவார்கள். இவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன் மொழிந்து, அதனை நீங்கள் தொடர்ந்து பின்பற்றும் போது பொருளாதார அளவில் உயர்வை காண்பீர்கள் என உறுதியாக கூறுகிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : ஏலக்காய்

ஏலக்காயை மாலையாக தயார் செய்து கொள்ளுங்கள். அதில் 27 ,54, 108 என்ற எண்ணிக்கையிலான ஏலக்காய் இருக்குமாறு உறுதி செய்து கொள்ளுங்கள்.  இந்த ஏலக்காய் மாலையை புதன் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று, அங்கு தனிச்சன்னதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாளுக்கு சாற்றி, நெய் தீபம் ஒன்றை ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அந்தத் தருணத்தில் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் 'ஓம் நரசிம்மாய நமஹ' அல்லது 'ஓம் நரசிம்மாய போற்றி' என்ற மந்திரத்தை 108 முறை அல்லது நீங்கள் எந்த எண்ணிக்கையில் ஏலக்காயை மாலையாக தொடுத்திருக்கிறீர்களோ.. அந்த எண்ணிக்கையில் மந்திரத்தை மனதில் தியானித்து உச்சரிக்க வேண்டும்

இந்த பிரார்த்தனையை தொடர்ந்து ஐந்து, ஏழு ,ஒன்பது ஆகிய உங்களுக்கு சௌகரியமான வாரங்களில் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால்.. உங்களுடைய பொருளாதார நிலை உயர்வடைவதை அனுபவத்தில் காணலாம்.

புலம் பெயர்ந்த சிலரும், இங்கு இருக்கும் சிலரும் எங்களுக்கு அருகில் பெருமாள் ஆலயம் இல்லை என்றோ அல்லது அங்கு லட்சுமி நரசிம்மருக்கு தனி சன்னதி இல்லை என்றோ கருதினால்அவர்கள் தங்களுடைய வீடுகளில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் உருவப்படத்தை வைத்து இந்த பிரார்த்தனையை மேற்கொள்ளலாம். அந்த தருணத்தில் 27 என்ற எண்ணிக்கையிலான ஏலக்காயை மாலையாக தயாரித்து, அணிவித்து வழிபடுவது தான் சிறந்ததாக இருக்கும். 

இந்த தருணத்தில் நீங்கள் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவதுடன் கல்கண்டு, வாழைப்பழம் என ஏதேனும் ஒரு நைவேத்தியத்தையும் வைத்து வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனைத் தொடர்ந்து மாலையாக சாற்றி வழிபட்ட ஏலக்காயை என்ன செய்வது? என யோசிப்பீர்கள். 

ஐந்து அல்லது ஏழு வாரங்களில் இந்த வழிபாட்டை மேற்கொண்டால்.. முதல் வாரத்தில் சாற்றிய ஏலக்காய் மாலையை, அடுத்த வாரம் புதிதாக மாற்றும் போது, ஏலக்காய் மாலையை எடுத்து அதனை சைவ சமையலுக்கும், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தேநீரிலும், குடிநீரிலும் பொடியாக்கி கலந்து பாவிக்கலாம் அல்லது அந்த ஏலக்காயை நீங்கள் உங்களது சட்டை பைகளிலோ அல்லது பண பைகளிலோ ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு சென்றால் அது நல்ல பலனை வழங்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பித்ரு தோஷம் விலகுவதற்கான வழிபாடு..!

2025-07-08 17:35:38
news-image

குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைப்பதற்கான சூட்சமக்...

2025-07-07 16:51:34
news-image

கேட்டதை கொடுக்கும் பிரத்யேக நட்சத்திர வழிபாடு..!?

2025-07-05 17:19:05
news-image

பிரபலமடைவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-07-04 14:46:43
news-image

பணவரவிற்கான தடையை அகற்றும் சூட்சும குறிப்பு..!?

2025-07-03 16:23:18
news-image

நவகிரக தோஷம் நீக்குவதற்கான பரிகாரம்

2025-07-02 17:41:28
news-image

தொழில் விருத்தி அடைவதற்கான சூட்சும வழிபாடு

2025-07-01 18:16:08
news-image

சுறுசுறுப்பாக இருப்பதற்கான சூட்சும வழிமுறை

2025-06-30 18:40:03
news-image

2025 ஜூலை மாத ராசி பலன்கள்

2025-06-30 16:42:02
news-image

வேலை வாய்ப்பை உண்டாக்கும் சூட்சம குறிப்பு

2025-06-27 17:04:55
news-image

கடன் பிரச்சினை மறைவதற்கான சூட்சும வழிபாடு...!?

2025-06-26 17:30:51
news-image

மாங்கல்ய தோஷ நிவர்த்திக்குரிய தான பரிகாரம்..!?

2025-06-25 16:44:48