(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் மின்சார சபை திருத்த சட்டமூலம் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கொண்டுவந்திருந்த சட்ட மூலத்தின் பிரதியாகும். மின்சாரசபையை தனியாருக்கு விற்பனை செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும் என முன்னிலை சோசலி கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
உத்தேச மின்சார சபை சட்டமூலத்தில் திருத்தம் மேற்காெள்ள அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் வெள்ளிக்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை மின்சார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதுதொடர்பான சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களை பார்க்கும்போது, கடந்த அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க, காஞ்சன விஜேசேகர ஆகியோரும் மின்சாரசபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்திருந்தது.
அதில் மின்சார சபையின் நிறுவனங்களை 14 துண்டுகளாக பிரித்து, எதனை விற்பனை செய்வது, எதனை பகுதியளவு விற்பனை செய்வது என நடவடிக்கை எடுத்திருந்தது.
தற்போது இந்த அரசாங்கமும் மின்சார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சட்டமூலம் தயாரித்து சமர்ப்பித்திருக்கிறது. அந்த சட்டமூலத்தில் மின்சாரசபை நிறுவனங்களை 6 துண்டுகளாக பிரித்திருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு பிறகே அந்த நிறுவனங்களை எத்தனை துண்டுகளாக பிரிப்பது என தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் துண்டுகளாக பிரிக்கப்படும் பகுதிகள் நிறுவனங்களாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நிறுவனங்களாக மாற்றப்பட்டால், அதனை விற்பனை செய்வது என்பது உறுதியாகும். அதனை யாராலும் தடுக்க முடியாது. கூட்டாக செயற்படும் நிறுவனத்தை துண்டுகளாக பிரிப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மின்சாரசபை நிறுவனத்தை பணம்கொடுத்து வாங்க இலங்கையில் நிறுனம் இல்லை. அந்தளவு விசாலமானதாகும். அதனால் இந்த நிறுவனத்தை துண்டுகளாக பிரித்து விற்பனை செய்வதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்சார சபை கடந்த வருடம் 147 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்திருந்தது. இது இந்த நிறுவனத்தின் மூலம் எந்தளவு லாம் பெற்றுக்கொள்ளலாம் என நிறுவனங்களுக்கு காட்டுவதற்கே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனால் மின்சாரசபையை தனியார் மயமாக்குவதற்கு அரரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கையை தோற்கடிப்பதற்கு ஒன்றிணையுமாறு தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
இதுதொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களுடம் நாங்கள் முன்னெடுத்திருந்த கலந்துரையாடல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தின் இந்த மின்சாரசபை சட்டமூலத்துக்கு எதிராக நாங்கள் உட்ப பல தரப்பினர் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தோம்.
அது தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்திருக்கின்றன. நீதிமன்றத்தின் தீீர்ப்பு விரைவாக சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படும் என நினைக்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM