சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளது - ஹர்ஷன சூரியபெரும

13 Jun, 2025 | 07:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் ஒருசில நிபந்தனைகளை கடுமையாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. செலவுகளுக்கு அமைவாகவே சேவைகளின் கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை நாணய நிதியம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது என பதில் நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார திட்டங்களை அடிக்கடி மாற்றியமைப்பது பிரச்சினைக்குரியதாக அமையும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் ஒருசில நிபந்தனைகளை கடுமையாக நிறைவேற்றவேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. ஆகவே சிறந்த பொருளாதார மீட்சிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நீட்டிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படும்.

மின்கட்டணம் உட்பட அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் இதர சலுகைகளுக்கான செலவுகளுக்குரிய வகையில் அவற்றுக்கான கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. தற்போது வருடாந்த கட்டண திருத்தத்துக்கு அமைய மின்கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்துடன் தொடர்புடைய இதர சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38
news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04