நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு

13 Jun, 2025 | 05:49 PM
image

ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’  திட்டத்துடன் இணைந்ததாக, நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (13) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.

மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபின் வரலாறு, பாராளுமன்றத்தின் வகிபாகம், “Clean Sri Lanka” திட்ட எண்ணக்கருவின் பெறுமதி மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் பற்றிய புரிதலைப் பெறும் வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்கியது.

மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல் மற்றும் இலங்கை வங்கிக் கணக்குகள் ஆரம்பித்தல் என்பன இதன்போது இடம்பெற்றன.

ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, இலங்கை பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயலத் பெரேரா, இலங்கை பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) காஞ்சன ஹேரத் ஆகியோருடன் நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் அதிபர் டீ.ஆர்.டீ வானகுரு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுளம்பு பெருக வழிவகுக்கும் சூழலை வைத்திருப்போர்...

2026-07-18 15:08:08
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15
news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56