(எம்.மனோசித்ரா)
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே முன்னெடுக்கப்படும் பயணிகள் படகு சேவைக்கான ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கில், இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்துக்கு நிதி உதவியை நீடிக்க தீர்மானித்துள்ளது.
இந்த நீடிப்பானது இரு நாடுகளுக்கும் இடையேயான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டுக்கு உகந்ததாகவுள்ளது.
இந்த நிதி உதவி, ஆண்டுதோறும் 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக (மாதத்திற்கு சுமார் 25 மில்லியன் ரூபா) வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டைப் போலவே, முக்கிய தளவாட மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடு செய்வதன் மூலம் சேவையின் மலிவு மற்றும் செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் இந்த பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டதிலிருந்து 15,000 க்கும் மேற்பட்ட பயணிகளின் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது.
அத்தோட இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களையும் வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பு புத்துயிர் பெறுவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
படகு சேவைக்கான நிதி உதவி தொடர்வதானது, 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போதும், கடந்த ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டபடி, மேம்பட்ட கடல்சார் இணைப்புக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்ததாகவுள்ளது.
இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் மேலதிக வழித்தடங்கள் மற்றும் சேவைகளை ஆராய்வது எதிர்காலத் திட்டங்களில் அடங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM