நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக பத்மநாதன் மயூரன் தெரிவு

13 Jun, 2025 | 05:45 PM
image

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்த்த பத்மநாதன் மயூரன் ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (13) பகல் நடைபெற்றது.

அதன்போது தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ப.மயூரன் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வேறு யாரும் போட்டியிடாத காரணத்தினால் மயூரன் தவிசாளராக ஏகமனதாக தெரிவானார்.

அதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தவிசாளர் தெரிவின்போது சபையில் இருக்கவில்லை என சபையில் இருந்து வெளியேறியிருந்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியும் இலங்கை தமிழ் அரசு கட்சியும் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். 

இந்த கூட்டத்தின்போது உப தவிசாளராக ஜெயகரன் தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27