“பாதுவா நகரிலே உதித்தீர் முனிவரே பாதுமலை சூடினோம் கனிவாய் ஏற்பீரே”
செவ்வாய்க்கிழமைதோறும் கொழும்பு கொச்சிக்கடை வட்டாரத்தில் மூன்று வேளையும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் தான் இது. இப்பாடல் காலையில் தமிழிலும் நண்பகலில் ஆங்கிலத்திலும் மாலையில் சிங்களத்திலும் பாடப்படுவது சிறப்பம்சமாகும். இலட்சக்கணக்கான பக்தர்களை ஆலயம் நோக்கி வரச்செய்வதும் இப்பாடல் என்றால் கூட அது மிகையல்ல.
செவ்வாய்க்கிழமை என்றாலே கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய சுற்றுவட்டாரம் விழாக்கோலம் பூண்டுவிடும். அப்படியிருக்கும் போது, புனிதரின் திருவிழா என்றால் கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்?
கொடியெற்றம் தொடங்கிய நாள் முதல் திருவிழா தினம் வரை கொச்சிக்கடை கோலாகலமாகவே காட்சி தரும் என்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. புனித அந்தோனியார் ஆலய 191 ஆவது வருடாந்த திருவிழா இன்று கோலாகலாமாக கொண்டது.
புனிதரின் பிறப்பு
பதுவை பதியரான புனித அந்தோனியார், புனித பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குருத்துவதாவர். இவரது பிறப்பிடம் லிஸ்பன் நகராக இருந்தலும் உலக மக்கள் அனைவராலும் இவர் “ பதுவைப்பதியர் ” என்றே அழைக்கப்படுகிறார். இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் புனிதர் தமது இறுதி நாட்களை கழித்ததாக வரலாறு கூறுகின்றது. அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவே தான் “பதுவைப்பதியர்” என்று அழைக்கப்படுகின்றார்.
இவர் இறந்த சில வருடங்களிலேயே இவருக்கு பட்டம் பெற வாய்ப்பாக அமைந்தது இவரது புனித வாழ்வும் , கூரிய நுண்ணறிவும் , விவிலிய ஆர்வமும் தான். புனிதர் மரித்த இன்றைய தினமே (ஜீன் 13) திருவிழா எடுக்கும் நாளாக திருச்சபையால் பிரகடணப்படுத்தப்பட்டது. ஐரொப்பியாவிலுள்ள போரத்துக்கல் நாட்டின் தலைநகராக லிஸ்பன் மாநகரில் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி புனிதர் பிறந்தார். அவரத பெற்றோர்கள் மார்ட்டின், மேரி ஆகியோருக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தையே புனித அந்தோனியார். இவரது இயற்பெயர் பேர்டினாண்ட் மார்ட்டின் என்பதாகும்.
தனது ஆன்ம குருவிடம் ஆலோசனைபெற்று புனித அகுஸ்தின் துறவற சபையின் புனிதரட சேர்ந்தார். உற்றார் உறவினரை விட்டுபிரிந்த புனிதர். தனது அதிபரின் அனுமதி பெற்று கொய்மரா என்னும் நகருக்கு சென்று குருத்துவ கல்வி கற்றார். 1219 ஆம் ஆண்டு இவரது 24ம் வயதில் இவருக்கு குருப்பட்டம் வழங்கப்பட்டது. கிறிஸ்து ஆண்டவர் வழியில் தாமும் வாழ்ந்து வேதசாட்சியாக வேண்டும் என்ற அவாவினால் 1221 ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை வி்ட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையை சேர்ந்தார்.
பிரான்சிஸ்கன் சபையில்
பிரான்சிஸ்கன் சபையில் சேந்ததுமே பேர்டினாண்ட் என்ற தனது பெயரை “ அந்தோனி“ என மாற்றிக்கொண்டார். போர்லி என்னுமிடத்தில் தனது அதிபரின் பணிப்புரையை ஏற்று அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினரார்.
அதன் மூலம் புனித அந்தோனியார் புகழ்பெற்ற மத போதகரானார். அதன் பின் பதுவை நகரில் திருமறை போதகரான அருட்பணியாற்றிய புனிதர் வாழும் காலத்திலேயே இறைவன் அழித்த அருட்கொடையால் அற்புதங்கள் பல புரிந்தார். அவரது மறையுரையை கேட்க ஆயிரங்கணக்கில் இலட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.
கிறிஸ்த்துவ கோட்பாடுகளை விளக்கியும் உலக நடப்புக்களை முன்வைத்தும் போதித்தார். தாம் வாழ்ந்த காலத்திலும் மரித்த பின்னரும் இறைவன் அருளால் ஏராளமான புதுமைகள் புரிந்து “ கோடி அற்புதர் புனித அந்தோனியார்” என்ற சிறப்பை பெற்றார். புனித அந்தோனியாரின் புதுமைகள் கணக்கில் அடங்காதவை இன்றும் கூட உலகெங்கிலுமுள்ள புனிதரின் பெயர்கொண்ட ஆலயங்களில் எல்லாம் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஒருமுறை இவர் ரிமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததை கேட்க சிலர் மறுத்துவிட்டனர். அப்போது கடலிலுள்ள மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதை கேட்டுக்கொண்டிருந்ததாக ஒரு புதுமை வரலாறு கூறுகின்றது. இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் எழுந்தருளியிருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை, தன்முன்னே போடப்பட்ட உணவை உண்ணாமல் அந்தோனியாரின் கட்டளைக்கு கீழ் படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராத்திதாக புதுமை வரலாறு கூறுகின்றது.
இறைவனின் அருளால் புனிதர் செய்த புதுமைகளை பறறிக் கேள்விப்பட்டு புனிதரை நாடி வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர் அருட்பணியாற்றிய மடத்தில் அமைதியற்ற சூழல் ஏற்படலாயிற்று. இதனால் மடத்தின் தலைமை குரு தொடர்தும் புதுமைகளை செய்ய புனிதருக்கு தமைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 23 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைய 13 புதுமைகளையும் செய்து முடித்த பின் வெளியே உலாவ சென்றார்.
அப்போது உயரமான கட்டிடத்திலிருந்து ஒருவர் தவறிவிழுந்த வேளை “ அந்தோனியாரே என்னை காப்பாற்றும் ” என்று அபயக்குரல் எழுப்ப, அவரை அப்பயே அந்தரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, மடத்தலைமை குருவிடம் ஓடி சென்று 14 ஆவதாக ஒரு புதுமையை செய்ய அனுமதி கேட்டு அந்த மனிதரை காப்பாற்றினாராம் புனித அந்தோனியார். அதேபோன்று, மற்றுமொரு புதுமையில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் புனிதர் போதித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.
இறப்பு
1231ஆம் ஆண்டு புனித அந்தோனியார் நோய்வாய்ப்படலானார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13ம் திகதி இறுதி திருவருட் சாதனங்களை பெற்ற பின் தனது 36வது வயதில் இறையடி சேர்ந்த புனிதர். புனிதர் மரித்து 32 ஆண்டுகளுக்கு பின் (1263) அவருடைய கல்லறை திறக்கப்பட்டது. அங்கே அதிசயத்தக்க விதத்தில் அவருடைய நாக்கு மட்டும் இருக்கக் காணப்பட்டது. புனிதரின் நன்நாக்கு இன்றும் பதுவை நகர் ஆலயத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகின்றது.
புனித அந்தோனியார் இறந்து ஒரு வருடம் ஆவதற்கு முன்பே கத்தோலிக்கத் திருச்சபை அந்தோனியாருக்கு புனிதர் பட்டமிளித்து பிரகடனப்படுத்தியது. அதுமட்டுமல்ல 1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களின் ஒருவராக அறிவித்தார்.
தலைநகர் கொழும்பின் கொச்சிக்கடைப் பகுதியில் புனித அந்தோனியார் கோயில் கொண்டெலுந்து பக்தர்களுக்குத் தினமும் அருள் பாலித்து வருகிறார். இருகரம் நீட்டி தன்னை நாடிவரும் பக்தர்களை புனித அந்தோனியார் கைவிட்டதாக சரித்திரமே இல்லை. இன மத மொழி பேதங்களை கடந்து தினமும் ஆலயம் நோக்கி வரும் பக்தர்களுக்கும் குறைவே இல்லை. புனிதரின் திருநாள் நன்னாளில் நாமும் அவர் பாதம் நாடிச் செலவோம் ; புனிதரின் அருளாசி பெற்று மகிழ்வோம் ; அவர் புகழ் பாடுவோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM