நிறுத்தி வைக்கப்பபட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பெல்மடுல்லை நோனாகம வீதியின் கொஸ்வெட்டிய பகுதியின் வீதியில் இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கொடகவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து பல்லேபெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொடகவெல அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரென அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM