இன்றைய வானிலை 

13 Jun, 2025 | 06:11 AM
image

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய , வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல்  பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு , திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:46:15
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41
news-image

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான...

2026-07-16 13:31:21
news-image

உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பான மனு...

2026-07-16 13:17:48