bestweb

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று 

Published By: Vishnu

13 Jun, 2025 | 05:14 AM
image

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191 ஆவது வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது.

வருடாந்த திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 3 ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய தொடர்ந்து 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் நடைபெற்றன.

இதையடுத்து, 12ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை பெருவிழா நடைபெற்றது. 

திருவிழா தினமான இன்று  13 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, திருவிழா பாடல் திருப்பலிகள் இன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின் தலைமையில் சிங்கள மொழியிலும், நண்பகல் 2 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் ஜே.டி. அன்தனி ஆண்டகையின் தலைமையில் ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படும்.

புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் இன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து, நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை -...

2025-07-17 08:43:12
news-image

ஐந்தாண்டுகளில் 2000 மெகா வோல்ட் சூரிய...

2025-07-17 09:26:26
news-image

ஆசிய, பசுபிக் வலயத்தில் சூரிய சக்தி...

2025-07-17 09:21:03
news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03