விசேட தடுப்பு காவல் உத்தரவின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'அஹுங்கல்லே லொக்கு பெட்டி பயன்படுத்தியதாக கூறப்படும் 2 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடு வருமான 'அஹுங்கல்லே லொக்கு பெட்டி என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார என்பவர் பெலரூஸில் கைது செய்யப்பட்டு கடந்த மே மாதம் 4 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேக நபர் தொடர்பில் மேல்மாகாண குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இதற்கமைய அவர் தற்போது 90 நாட்கள் விசேட தடுப்பு காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்செயல்கள் மற்றும் அவர் வசம் உள்ள ஆயுதங்கள் சொத்துக்கள் தொடர்பான முக்கிய பல தகவல்களும் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் லொக்கு பெட்டியின் ஒருங்கிணைப்பின் கீழ் ''கொஸ்கொட சுஜீவவின்'' தரப்பைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அஹூங்கல பகுதியில் வைத்து ''என்டா'' என அழைக்கப்படும் நபரை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாகவும் ''ரொட்டுவா அமில'' என்பவரிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை பெற்றுக் கொண்டதாகவும் அதில் 3 ரி-56 ரக துப்பாக்கிகளும் 3 பிஸ்தொல் ரக துப்பாக்கிகளும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
இதுவரை அவற்றுள் இரு துப்பாக்கிகள் தற்போது பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபருக்கு சொந்தமானது என கருதப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேல்மாகாண குற்ற தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன்ன தலைமையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM