(எம்.ஆர்.எம்.வசீம்)
கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த நபர் ஒருவரை மேயராக பெயரிடும் பட்சத்தில் நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சி உறுப்பினருக்கு ஆதரவளிக்குமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் காகல காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பு மாகநக சபையில் மேயர் தெரிவின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் எதிர்க்கட்சியினால் மாநகர சபையில் ஆட்சி அமைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம்.
தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு எதிர்க்கட்சியில் இருந்து அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தாகும். அதனால் ஆட்சி அமைப்பது தொடர்பான பிரதான பொறுப்பு இருப்பது அவர்களுக்காகும். அதுதொடர்பில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியால் மாநகர மேயராக பெயரிடப்படுபவர், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்பதுடன் ஊழல் மோசடிகளுடன் தொடர்பற்றவாரக இருந்தால், நிச்சயமாக மேயர் தெரிவில் வெற்றிபெற்று, எதிர்க்கட்சிக்கு ஆட்சி அமைக்க முடியுமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி பெயரிடும் மேயருக்கு நாங்கள் ஆதரவளிப்பது, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பது என்ற அடிப்படையில் அல்ல. மாறாக எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையிலாகும். அதனாலே மேயராக பெயரிடும் போது, வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகாத, அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியுமாள நபரை நியமிக்குமாறு தெரிவித்து வருகிறோம்.
அதனால் கொழும்பு மாநகர சபை எதிர்வரும் 16ஆம் திகதி மாநகர ஆணையாளர் தலைமையில் கூடி, மேயர் தெரிவு இடம்பெற இருக்கிறது. அதன்போது நாங்கள் தெரிவித்ததுபோல் ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த நபர் ஒருவரை மேயராக பெயரிடும் பட்சத்தில் நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சி உறுப்பினருக்கு ஆதரவளிப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM