(இராஜதுரை ஹஷான்)
மாத்தறை வெலிகம பகுதியில் 2023.12.31 ஆம் திகதி அதிகாலை W -15 ஹோட்டல் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் குழுவினர் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கும், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்துக்கும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும் ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலத்துக்கும், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வழங்கியுள்ள வாக்குமூலத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் இருப்பதை பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தரப்பும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் தரப்பும் ஏற்றுக்கொள்வதாக உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன குழுவுக்கு அறிவித்தார்.
வெலிகம பொலிஸ் நிலையத்துக்கும், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்துக்கும் சத்திய பிரமாணம் ஊடாக போலியான சாட்சியமளித்தோம். இந்த குழுவில் குறிப்பிடும் அனைத்து விடயங்களும் உண்மை. எமது உயரதிகாரிகளின் தவறால் நெருக்கடிக்குள்ளானதை இறுதி தருணத்தில் உணர்ந்தோம்.உயரதிகாரிகளின் தவறான பணிப்புக்களை கடமையின் நிமித்தம் செய்வதை சகல அரச உத்தியோகத்தர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றஞ்சாட்டப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டனர்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்காக அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து, விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி சூரசேன தலைமையிலான சிறப்புக் குழு நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.
நீதியரசர் (ஓய்வுநிலை) என்.பி.இத்தவெல, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க,சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ், சொலிசிட்டர் ஜெனரால் ரஜித பெரேரா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் மற்றும் அவரது சட்டத்தரணியான சஞ்சய் வீரவிக்கிரம ஆகியோர் குழுவில் முன்னிலையாகியிருந்தனர். மாத்தறை வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட 1, 24, 25 மற்றும் 26 ஆம் இலக்க சாட்சியாளர்கள் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
24 ஆம் இலக்க சாட்சியாளர்
குழுவில் முன்னிலையாகிய சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 24 ஆம் இலக்க சந்தேக நபரான கொழும்பு குற்றப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியான அன்ஸ்லம் டி சில்வாவிடம் மேலதிக சொலிட்டர் ஜெனரால் திலிப பீறிஸ் குறுக்கு விசாரணை செய்தார்.இதன்போது அன்ஸ்டம் டி சில்வா பல விடயங்களை குழுவின் முன் வெளிப்படுத்தினார்.
இந்த குழுவின் முன்னிலையில் நான் குறிப்பிடுபவை அனைத்தும் உண்மை என்று சத்தியபிரமாணம் செய்ததன் பின்னர் தனது விடயங்களை முன்வைத்தாரல். கொழும்பு குற்றப்புரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய (பணி இடைநீக்கம்) நெவில் டி சில்வா, 2023.12.30 ஆம் திகதியன்று என்னிடம் மாத்தறை வெலிகம பகுதியில் w -15 ஹோட்டலில் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய களியாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. ஆகவே அங்கு சென்று அந்த ஹோட்டலின் மதில் மற்றும் பெயர் பலகையின் மீது துப்பாக்கிச் சூட்டு நடத்த சொன்னார்.
2023.12.30 ஆம் திகதி இரவு 08 மணியளவில் கொழும்பில் இருந்து 8 பேருடன் மாத்தறை நோக்சிச் சென்றோம். இந்த குழுவுக்கு நான் தலைமை தாங்கினேன். கல்சிசையில் உள்ள எனது வீட்டுக்குச் சென்றோம். நான் வீட்டுக்குள் சென்றதன் பின்னர் வேனில் இருந்தவர்கள் வாகன இலக்கத்தகடு மாற்றி போலியான தகட்டை பொறுத்தியுள்ளார்கள் என்றார்.
இதன்போது குறுக்கு கேள்வி எழுப்பிய ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீறிஸ் 'இது சட்டரீதியான கடமையா என்றார்,இதற்கு பதிலளித்த 24 ஆம் இலக்க சாட்சியாளர் இல்லை, மாத்தறைக்கு செல்வதற்காக வழங்கப்பட்ட வேனின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டது.வெள்ளை நிற வேனில் நீல நிறத்திலான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.அடையாளம் மாற்றியமைக்கப்பட்டது என்றார்.
இதன்போது கேள்வியெழுப்பிய நீதியரசர் பி.பி. சூரசேன 'அந்த வாகனம் பொலிஸ் வாகனம் என்பதை அடையாளம் காண்பதை மாற்றியமைத்தீர்களா என்றார்,இதற்கு ஆம் என்று 24 ஆம் இலக்க சாட்சியாளர் பதிலளித்ததார்.
அந்த வாகனத்தில்; ஆயுதம் ஏதும் கொண்டு சென்றீர்களா என திலிப பீறிஸ் கேள்வியெழுப்பிய போது, அதற்கு பதிலளித்த 24 ஆம் சாட்சியாளர், டி 56 ரகப துப்பாக்கிகள் இரண்டு, 2 பிஸ்டல் ரக துப்பாக்கிகளை கொண்டு சென்றோம் என்றார்.
ஹோட்டல் அருகில் சென்று என்ன செய்தீர்கள் என திலிப பீறிஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த 24 ஆம் இலக்க சாட்சியாளர் 'ஹோட்டலின் அருகில் சென்று ஹோட்டல் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டோம்.மதுரங்க என்ற பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தில் இருந்தவாறு துப்பாக்கி சூட்டை நடத்தினார்.இதன்போது நான் இரண்டு காதுகளையும் கைகளால் மூடிக்கொண்டு வாகனத்ததுக்குள் இருந்தேன்.
நாங்கள் துப்பாக்கிச்சூட்டினை நடத்தி விட்டு வாகனத்தில் இருந்தவாறு சற்று முன்னோக்கி வருகையில், திடீரென பிறிதொரு துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டது.அப்போது நான் 'வேகமாக செல், வேகமாக செல்' என்றேன்.அப்போது தான் எம்முடன் இருந்த உபுல் என்பவருக்கு துப்பாக்கிச்சூடுபட்டது.
இதன்போது குறுக்கு கேள்வியெழுப்பிய திலிப பீறிஸ்' வெலிகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உங்கள் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்கள் என்பதை தாங்கள் அறியவில்லையா'இதற்கு பதிலளித்த சாட்சியாளர், துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதன் பின்னரே தான் அதனை அறிந்துக் கொண்டேன்.உபுலுக்கும், மதுரங்கவுக்கும் துப்பாக்கிச்சூடு, இருவரும் காயமடைந்திருந்தார்கள்.
வாகனத்தில் போலியான இலக்க தகடு இருந்தது. அந்த தகடை மாற்றினோம்.
W-15 ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு தொடர்பில் உரிய பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நெவில் டி சில்வா எம்மிடம் குறிப்பிட்டார்.ஆனால் அவர் குறிப்பிட்தை போன்று வெலிகம பிரதேச பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படவில்லை என்பதை அப்போது தான் அறிந்துக் கொண்டோம்.அவர் எங்களுக்கு பொய்யுரைத்தார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது அந்த இடத்தை அண்மித்த பகுதியில் 20 விசேட அதிரடி படையினர் ஒரு பேருந்தில் இருந்துள்ளார்கள்.அவர்களின் பேருந்து புறப்படுவதற்கு சற்று தாமதமாகியுள்ளது.அது எங்களின் நல்ல நேரம். அந்த பேருந்து உரிய நேரத்துக்கு இயங்கியிருந்தால் இன்று சாட்சி சொல்வதற்கு இருந்திருக்கமாட்டோம் என்றார்.
தொடர்ந்து கேள்வியெழுப்பிய திலிப பீறிஸ், மூன்றாம் தரப்பினர் உங்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக என்ற கதையை உருவாக்கியது யார் என்றார்,
இதற்கு பதிலளித்த 24 ஆம் இலக்க சாட்சியாளர்' இந்த சம்பவத்துக்கு பின்னர் நெவில் டி சில்வா வெலிகமவுக்கு வந்தார்.3 ஆம் தரப்பினரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று நாம் குறிப்பிடுவோம்.அப்போது எந்த பிரச்சினையும் எழாது என்றார். நாங்களும் அவ்வாறே வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலமளித்தோம்.அதேபோல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கும் அவ்வாறே குறிப்பிட்டோம்.இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கும், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும் தாம் பொய்யுரைத்ததாக 24 ஆம் இலக்க சாட்சியாளர் குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டார்.
உயர் அதிகாரிகளின் சட்டவிரோத பணிப்பினை செயற்படுத்த முனைந்ததால் சேவையில் இருந்து நீக்கப்பட்டு, ஓய்வூதியத்தை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளேன்.இது ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு,உயர் அதிகாரிகளின் சட்டவிரோத பணிப்புக்களை செயற்படுத்த முடியாவிடின் இடம்மாற்றம் பெற்றுக்கொண்டு செல்வது சிறந்தது என்று தோன்றுகிறது.
இதன்போது பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சய வீரவிக்கிரம 24 ஆம் இலக்க சாட்சியாளரிடம் தொடர்ச்சியாக பல கேள்விகளை முன்வைத்தார்.இதன்போது குழுவின் தலைவர் நீதியரசர். பி.பி. சூரசேன 'சாட்சியாளர் பதிலளிப்பதற்கு இடமளியுங்கள், நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கேள்விகளை கேட்காதீர்கள்' என்றார்.
இதற்கு பதிலளித்த சட்டத்தரணி சஞ்சய வீரவிக்கிரம, இவர் தான் அந்த குழுவுக்கு தலைமை தாங்கினார் ஆனால் எழுப்பும் கேள்விகளுக்கு பிறிதொருவரின் பெயர்களையே குறிப்பிடுகிறார்.இவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்' என்றார்.
இதன்போது குழுவின் தலைவரான நீதியரசர் பி.பி. சூரசேன 'உங்களின் பிரதிவாதியும் அவ்வாறு தானே பிறிதொரு தரப்பினரின் மீதான பொறுப்புக்களை குறிப்பிடுகிறார். ஆகவே கத்தி இரு புறங்களையும் வெட்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.
தொடர்ந்து 24 ஆம் இலக்க சாட்சியாளரிடம் கேள்வியெழுப்பிய ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் ' திருட்டுத்தனமான ஒரு செயலுக்கு திருட்டுத்தனமாக சென்றுள்ளீர்கள்' என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா என்றார், இதற்கு 24 ஆம் இலக்க சாட்சியாளர் ஆம் என பதிலளித்தார்.
25 ஆம் இலக்க சாட்சியாளர்
2023.12.30 ஆம் திகதி கடமையின் நிமித்தம் மாத்தறை செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். நான் சாரதியாக சென்றேன். அங்கு சென்றதன் பின்னரே உண்மையை அறிந்துக் கொண்டேன். சட்டவிரோதமான செயற்பாடு என்று அறிந்தும் சென்றோம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு சாதாரன சாரதி பதவி நிலையில் மேல்நிலையில் உள்ளவர்கள் சொல்வதை செய்ய வேண்டும். எதிர்த்து கேள்விகேட்க முடியாது. துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு சோடிக்கப்பட்ட விடயத்தை குறிப்பிட்டோம் என்றார்.
இதன்போது நீதியரசர் பி.பி.சூரசேன அது என்ன சோடிக்கப்பட்ட கதை ' ஹோட்டலின் முன்பாக கறுப்பு நிற தோள் பை அணிந்திருந்தவர் தான் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்' என்று இதனையே நீதிமன்றத்திலும் குறிப்பிட்டேன்.எனக்கு இது மனனமாகியுள்ளது. நான் என்ன செய்வது எனது உயர் அதிகாரிகள் சொன்னதை செய்தேன்.
நான் தம்புத்தேகம பகுதில் உள்ளேன் .தற்போது தொழிலும் இல்லை. இந்த சம்பவத்தால் பணி நீக்கப்பட்டுள்ளேன். விவசாயம் செய்தாவது பிழைத்துக் கொள்கிறேன் என்பனை நிம்மதியாக இருக்கவிடுங்கள். இந்த பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று மிகவும் கவலையான நிலையில் நீதியரசர்கள் முன்னிலையில் குறிப்பிட்டார்.
மாத்தறை வெலிகம பகுதியில் 2023.12.31 ஆம் திகதி அதிகாலை 15 ஹோட்டல் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் குழுவினர் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும் ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலத்துக்கும், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வழங்கியுள்ள வாக்குமூலத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் இருப்பதை பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தரப்பும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் தரப்பும் ஏற்றுக்கொள்வதாக உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன குழுவுக்கு அறிவித்தார்.
1ஆம் இலக்க சாட்சியாளர்
மாத்தறை வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் 1 ஆம் இலக்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள நிசாந்த டி சில்வா, இந்த சுற்றிவளைப்பு தொடர்பில் எம்மிடமிருந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு சகல தகவல்களையும் பெற்றுக்கொண்டது.இருப்பினும் 2023.12.30 ஆம் திகதியன்று சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வருவதாக முன்கூட்டியதாக தெற்கு மாகாணத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.
சுற்றிவளைப்புக்கு வருவதாயின் அதற்கான முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் அவ்வாறான முறையான வழிமுறைகள் ஏதும் பிற்பற்றப்படவில்லை. ஆகவே சுற்றிவளைப்புக்கு அப்பாற்பட்ட வகையில் ஏதேனும் விடயம் உள்ளது என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே இந்த சுற்றிவளைப்பின் பிரதான கண்காணிப்பாளர்களான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் நெவில் டி சில்வா ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும். முறையான வழிமுறைகளை பின்பற்றியிருந்தால் இந்த விளைவு ஏற்பட்டிருக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM