(நா.தனுஜா)
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வது குறித்து அமைச்சரவை அமைச்சர்களின் கருத்தினை அறியுமாறு சட்டமா அதிபர் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அவ்வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் எனக்கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்துச்செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.
அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது காணி அமைச்சர் லால் காந்தவினால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது இவ்விவகாரம் பற்றி எந்தவொரு விசேட கூற்றும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே இவ்வர்த்தமானி அறிவித்தல் நீக்கம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குமாறுகோரி கடந்த மாதம் 26 ஆம் திகதி கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்னமும் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செயப்படாத நிலையில், இதுபற்றி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடமும், பிரதமர் அலுவலகத்தின் உதவிச்செயலாளர் மிஹிரி தென்னக்கோனிடமும் குறுந்தகவல் ஊடாக விளக்கம் கோரியிருந்தார்.
அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகத்தின் உதவிச்செயலாளர் மிஹிரி தென்னக்கோன், இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களின் கருத்தினை அறியுமாறு சட்டமா அதிபர் காணி அமைச்சுக்கு அறிவித்திருப்பதாகவும், அதற்குரிய நடவடிக்கைகள் காணி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM