மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்ட கணக்கறிக்கைகளை இதுவரை சமர்பிக்க தவறியமை தொடர்பில் அந்த நிறுவனத்தின் நிதி புலனாய்வு பிரிவை மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் இந்த வழக்கு வியாழக்கிழமை (12) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
பிரதிவாதிகள் தரப்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் மன்றில் விடயங்களை முன்வைத்து இந்த விடயம் தொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த வருடம் நவம்பர் மாதம் விசாரணை அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அன்றைய தினம் பிரதிவாதிகளுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிதி நிறுவனங்களின் கணக்கறிக்களை மன்றில் சமர்பிக்குமாறு மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் இன்று வரை அந்த அறிக்கைகள் மன்றுக்கு சமர்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி முறைப்பாட்டாளர்களுக்கு இந்த வழக்கை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஆர்வம் இல்லையெனில் இது தொடர்பில் உரிய தீர்மானமொன்றை எடுக்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தமது சேவைபெறுநர்களுக்கு எதிராக மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதன்போது குறித்த கணக்கறிக்கைகளை மன்றில் சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும் இது தொடர்பில் மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவிடமிருந்து தமக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மன்றுக்கு அறிவித்தனர்.
இதற்கமைய முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி கணக்கறிக்களை இதுவரை சமர்பிக்க தவறியமை தொடர்பில் அந்த நிறுவனத்தின் நிதி புலனாய்வு பிரிவினை மன்றில் முன்னிலையாகி விடயங்களை முன்வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் பெயர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM