(ந.ஜெகதீஸ்)

சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சகல அரச சேவைகளினதும் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மாநாடொன்றை நடத்தவுள்ளது.

இதன் பலனாக நாட்டின் அரச சேவைகள் அனைத்தும் ஒரு நாள் ஸ்தம்பிக்கும் வகையிலான வேலை நிறுத்தப்போராட்டமும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியனராக மக்கள் விடுதலை முன்னனியும் இணைந்துக்கொள்ளும் என அதன் ஒருங்கிணைப்பாளர் கே.டி லால்காந்த சுட்டிக்காட்டினார்.

தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினர்.