bestweb

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் 'சீதா பயணம்' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 2

12 Jun, 2025 | 08:30 PM
image

நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சீதா பயணம்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீதா பயணம்' எனும் திரைப்படத்தில் புதுமுக நடிகர் நிரஞ்சன் , ஐஸ்வர்யா அர்ஜுன், அர்ஜுன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்திலும், பிரகாஷ்ராஜ், சத்யா ராஜ் ,கோவை சரளா, சரண் உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், அர்ஜுனின் சகோதரருமான துருவா சர்ஜா சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனுப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கிறார். 

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீராம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான அறிமுக நடிகர் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் இடையேயான காட்சிகள்-  சுவராசியமான உரையாடல்கள் - ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right